அன்புமணியிடம் ஆதரவு கேட்ட பாஜக தலைவர்
இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதை அடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வரும் ஜூலை 17ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் இன்னும் இரண்டு பெரிய கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
இந்த நிலையில் ஏற்கனவே அதிமுக இரு அணிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்ட பாஜக தற்போது தமிழகத்தில் ஒரே ஒரு எம்பியை வைத்திருக்கும் அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பாஜக குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புமணி எம்பியிடம் பாஜக முத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு தொலைபேசியில் உரையாடியதாகவும், கட்சியின் முடிவுப்படு வாக்களிக்க உள்ளதாக அன்புமணி பதில் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.