தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 119 கோடி: டிராய் தகவல்

தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 119 கோடி: டிராய் தகவல்


தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் வெளி யிட்டுள்ள தகவல்படி ஏப்ரல் மாதத்தில் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 119.88 கோடியாக உள்ளது. இருந்தாலும் வளர்ச்சி தொடர்ந்து மிகவும் குறைவாகவே இருக்கிறது.

மார்ச் இறுதி நிலவரப்படி தொலைத்தொடர்பு வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை 119.45 கோடியாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் வாடிக்கையாளர்களின் வளர்ச்சி 119.88 கோடியாக உயர்ந் துள்ளது. மாதாந்திர வளர்ச்சி 0.36 சதவீதமாக உள்ளது.

வயர்லெஸ் அல்லது மொபைல் வாடிக்கையாளர்களின் எண் ணிக்கை 0.38 சதவீதம் அதிகரித் துள்ளது. மார்ச் மாதத்தில் 117.01 கோடியாக இருந்த மொபைல் வாடிக்கையாளர்களின் எண் ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 117.46 கோடியாக அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களின் வளர்ச்சி விகிதம் கடந்த ஏழு மாதங்களில் இருந்ததைவிட குறைவானதாகும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத் தில் புதிய வாடிக்கையாளர்களின் வளர்ச்சி 2.67 சதவீதமாக இருந்தது. அப்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1.96 கோடி புதிய வாடிக்கையாளர்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

4ஜி தொலைத்தொடர்பு சேவை இலவசமாக வழங்கிய நாட்களுக்கு பிறகும் வாடிக்கையாளர்களை கவர்வதில் ரிலையன்ஸ் ஜியோ முன்னிலையில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் புதிய வாடிக்கையாளர் களில் 87 சதவீதம் பேர் ஜியோ சேவையை பெற்றுள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் மிகப் பெரிய அளவில் மொபைல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களை இழந்துள் ளது. இந்த நிறுவனம் 14.6 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள் ளது. ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ் நிறுவனம் 13.2 லட்சம் வாடிக்கையாளர்கள் இழப்பை சந்தித்துள்ளது. ஏர்செல் 3.3 லட்சம், சிஸ்டெமா ஷையாம் 2.7 லட்சம் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனம் 2,137 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது.

லேண்ட்லைன் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கையில் 0.42 சதவீதம் சரிவு உள்ளது. 1 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறியுள்ளனர்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தி லிருந்து 18.6 லட்சம் வாடிக்கை யாளர்களும், எம்டிஎன்எல் நிறு வனத்திலிருந்து 7,888 வாடிக்கை யாளர்களும் வெளியேறியுள்ள னர். பிராட்பேண்ட் இணைப்பு வாடிக்கையாளர்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. மார்ச் மாதத் தில் 27.65 கோடியாக இருந்த பிராட்பேண்ட் வாடிக்கையாளர் கள் எண்ணிக்கை ஏப்ரல் மாதத் தில் 28.42 கோடியாக வளர்ச்சி அடைந்துள்ளது.

Leave a Reply