குடியரசு தலைவர் தேர்தல்: அதிமுகவிடம் ஆதரவு கேட்டது பாஜக

குடியரசு தலைவர் தேர்தல்: அதிமுகவிடம் ஆதரவு கேட்டது பாஜக

இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை 17ஆம் தேதி நடைபெறவுள்ள் நிலையில் பாஜக தனது கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறது. அதேபோல் பாஜக கூட்டணியில் இல்லாத அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பொதுவேட்பாளர் திட்டத்தால் அதிர்ச்சி அடைந்த பாஜக தற்போது சின்ன சின்ன கட்சிகளிடமும் பேசி வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் இடம் பேச்சுவார்த்தையை முடித்துவிட்ட பாஜக இன்று அதிமுக அம்மா அணியிடம் பேசியுள்ளது. இன்று டெல்லியில் அம்மா அணியின் முக்கிய தலைவர் தம்பித்துரையிடம் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது குடியரசுத் தலைவர் தேர்தலில், தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும்படி வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தம்பித்துரை, ‘வெங்கைய நாயுடு எனது நண்பர். அவருடனான சந்திப்பு அரசியல் குறித்தது அல்ல. குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து முதல்வர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்கள்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply