சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணி மீண்டும் தொடங்கியது

சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணி மீண்டும் தொடங்கியது

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இடிகும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி மற்றும் நகைக்கடையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 7 மாடி கட்டடங்கள் கடும் சேதம் அடைந்ததோடு, கோடிக்கணக்கான மதிப்புள்ள துணிகள் மற்றும் நகைகள் எரிந்து சாமபலானது. இதனை தொடர்ந்து கட்டடம் வலுவிழந்ததால், அதை இடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதற்காக, ‘ஜா கட்டர்’ இயந்திரமும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் ‘ஜா கட்டர்’ இயந்திரத்தை இயக்கிய சரத்குமார் என்ற தொழிலாளி துரதிர்ஷ்டவச்மாக உயிரிழந்தார். கட்டட இடிபாடுகள் விழுந்து இவர் பலியானார். இவரது மரணத்தைத் தொடர்ந்து இடிப்புபணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் இன்று காலைமுதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்குள் கட்டடம் இடிக்கும் பணி முழுமையாக நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply