அரவிந்தசாமி பிறந்த நாளில் இரண்டு படங்களின் ஃபர்ஸ்ட்லுக்
பிரபல நடிகர் அரவிந்தசாமி இடையில் சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகியிருந்தாலும் ‘தனி ஒருவன்’ படத்தின் வெற்றியால் மீண்டும் பிசியானார். இளம் நடிகர்களுக்கு இணையாக அவர் தற்போது நான்கு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று தான் செல்வா இயக்கி வரும் ‘வணங்காமுடி’
அரவிந்தசாமி நடித்த ‘புதையல்’ படத்தை ஏற்கனவே இயக்கிய செல்வா தற்போது ‘வணங்காமுடி’ படத்தை ஒரு த்ரில்லர் படமாக இயக்கி வருகிறார். இந்த நிலையில் நாளை அரவிந்தசாமி பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அதேபோல் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள அடுத்த படமான ‘நரகாசுரன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கும் நாளை வெளியாகவுள்ளது. ஒரே படத்தில் இரண்டு ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளதாக் அரவிந்தசாமி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.,