மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கண்டனம்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது தமிழக முதல்வராகிவிட வேண்டும் என்று துடிக்கின்றார். அவரது பகல்கனவு நிறைவேறாது என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நெல்லையில் உள்ள பாளை பெல் மைதானத்தில் நேற்று செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘எப்படியாவது முதல்வராக வரவேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் துடிக்கிறார் என்றும், அம்மா உணவகத்தில் தரமில்லை, அம்மா குடிநீர் எங்கும் தாராளமாக கிடைப்பதில்லை என்றும் கூற்யுள்ளார். மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளன என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் தினகரன் அணிகளுக்கு தங்களது பலத்தை நிரூபித்துக் காட்டும் விதமாக நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், அவை தலைவர் மதுசூதனன், முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் நந்தம் விஸ்வநாதன், முனியசாமி, செம்மலை, பாண்டியராஜன், சண்முகம், ஜெயபால், எம்மிக்கல் மைத்ரேயன், நட்டர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.