பிரான்ஸ் அதிபர் தேர்தல்: 39 வயது இளைஞர் அதிபராகிறார்
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 39 வயது இளைஞரான மக்ரோனின் ரிப்பளிக் ஆன் தீ மூவ் கட்சி” அபார வெற்றி பெற்றுள்ளதால் பிரான்ஸ் நாடு ஒரு இளைஞரை அதிபராக பெற்றுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இரண்டு கட்டமாக அதிபர் தேர்தல் நடத்தப்படும் இரண்டு தேர்தல்களிலும் 50%க்கும் மேல் வாக்குகள் பெறும் கட்சியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் இந்த நிலையில் 577 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உறுப்பினர்களை தேர்தெடுப்பதற்கான முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 11-ம் தேதி நடைப்பெற்றது. இந்த தேர்தலில் இளம் அதிபர் மக்ரோனின் கட்சியே முன்னிலை வகித்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று நடைப்பெற்றது.
இந்த தேர்தல் முடிவின் படி மொத்த உள்ள 577 நாடாளுமன்ற தொகுதிகளில் 355 முதல் 425 இடங்கள் வரை இளம் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் கட்சியான ரிப்பளிக் ஆன் தீ மூவ் வெற்றி பெற்று பெரும்பான்மை இடங்களை பெற்று வெற்றி அடைந்துள்ளது. இதனால் இளைஞர் மக்ரோன் பிரான்ஸ் நாட்டின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்.