சுவையான செஃப் சமையல்! – புதினா வெள்ளரி சூப்
முடிந்து பசியோடு வீடு திரும்பும் குழந்தைகளுக்குப் புத்துணர்வு தரவும் திருப்தியா சாப்பிடவும் வகை வகையா சமைக்க வேண்டாமா?” என்று கேட்கிறார் தஞ்சாவூர் லட்சுமி ஹோட்டலைச் சேர்ந்த செஃப் காவிரிநாடன். புது வகை உணவுக்கு எங்கே செல்வது என்று பெற்றோரைக் குழம்ப வைக்காமல் அவரே சில எளிய சமையல் குறிப்புகளையும் தருகிறார். தினம் ஒன்றாகச் செய்து அசத்துங்கள்!
புதினா வெள்ளரி சூப்
என்னென்ன தேவை?
புதினா – ஒரு கைப்பிடியளவு
சிறிய வெள்ளரிக்காய் – 2
முலாம் பழம் – 1 கப் (தோல் சீவி, விதை நீக்கி, நறுக்கியது)
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஐஸ் கட்டி – ஒரு கப்
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எப்படிச் செய்வது?
புதினா, வெள்ளரிக்காய், முலாம் பழம், மிளகுத் தூள், உப்பு, ஐஸ் கட்டி அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். இதை வடிகட்டி அதனுடன் கெட்டித் தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து, மேலே கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள். குடித்ததுமே புத்துணர்ச்சி தரும் குளிர்ந்த சூப் இது.