இனிமேல் தாஜ் ஓட்டலின் படத்தை பயன்படுத்த முடியாது: நிர்வாகம் அதிரடி

இனிமேல் தாஜ் ஓட்டலின் படத்தை பயன்படுத்த முடியாது: நிர்வாகம் அதிரடி

மும்பை உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாஜ் ஓட்டல் உள்ளது. இந்தியாவின் முன்னணி ஓட்டல் நிறுவனமான தாஜ் ஓட்டல், மும்பையில்  உள்ள தாஜ் ஹோட்டல் கட்டிடத்தின் தோற்றத்திற்கு காப்புரிமை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் 1903ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஹோட்டலின் பிரம்மாண்டமான வடிவமைப்பு பல திரைப்படங்களில் பின்னணிக் காட்சியாக இடம்பெற்றுள்ளது. உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற இந்த ஹோட்டல் நிர்வாகம் தங்கள் கட்டிடத்தின் தோற்றத்திற்கு காப்புரிமை பெற்றுள்ளது. இதன் மூலம் தாஜ் ஹோட்டலின் படத்தை லாப நோக்குடன் எங்கும் பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்த தாஜ் ஹோட்டலுக்கு பணம் கட்டி அனுமதி பெற வேண்டும்.

இதன் மூலம் கட்டிடத்திற்கு காப்புரிமை பெற்ற முதல் நிறுவனம் என்ற பெயரை தாஜ் ஹோட்டல் பெற்றுள்ளது. மும்பை நகரின் சின்னமாக விளங்குவதால் இந்தக் கட்டிடத்தின் முக்கியத்துவம் கருதி, காப்புரிமை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்த ஹோட்டலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது நினைவுகூரத்தக்கது

Leave a Reply