ஒரு படிப்பு படித்தால் இரண்டு பட்டங்கள்: சென்னை ஐஐடி அதிரடி.

ஒரு படிப்பு படித்தால் இரண்டு பட்டங்கள்: சென்னை ஐஐடி அதிரடி.

இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி, பி.டெக். இளநிலை பட்ட மாணவர்களும் இரண்டு பட்டங்களை ஒரே நேரத்தில் பெறும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி சென்னை ஐஐடியில் 5 ஆண்டுகள் கொண்ட பி.டெக். மற்றும் எம்.டெக். இரட்டைப் பட்டம் ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த இரட்டைப் பட்டப்படிப்பு இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் இரண்டிலும் ஒரே துறை சார்ந்த படிப்பாகவே இருக்கிறது.

இந்நிலையில் பி.டெக். இளநிலை படிப்புடன் தொடர்புடைய வேறு துறை சார்ந்த எம்.டெக். படிப்பை தேர்வுசெய்து படிக்கும் வசதியுடன் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.டெக். மற்றும் எம்.டெக். இரட்டைப் பட்டப்படிப்பு திட்டத்தை சென்னை ஐஐடி நடப்பு ஆண்டு முதல் அறிமுகம் செய்கிறது.

ஏற்கெனவே இரட்டைப் பட்டப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாமல், 4 ஆண்டுகள் பி.டெக். படிப்புகளில் சேர்ந்த மாணவர்களும் இதில் இணைய முடியும். ஆனால், அவர்கள் ஐந்தாவது பருவத்தின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த மதிப்பெண் சராசரி (சி.ஜி.பி.ஏ.) 8 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.

Leave a Reply