லண்டன் மசூதி தாக்குதல்: குற்றவாளியின் அடையாளம் தெரிந்தது.
கடந்த சில மாதங்களாகவே இங்கிலாந்து தலைநகர் லண்டன் தீவிரவாதிகளால் குறி வைக்கப்பட்டு தாக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் கார் மூலம் மசூதியில் இருந்து வெளியே வருபவர்களை ஏற்றிய தாக்குதல் நடந்தது.
இந்த திடீர் தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து சென்று வேன் டிரைவரை மடக்கி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் கார்டிப் நகரைச் சேர்ந்த டெரன் ஆஸ்பர்ன் (45) என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு லண்டன் பாலத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர், இஸ்லாமியர்கள் மீதுள்ள வெறுப்பால் நிகழ்த்தப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக லண்டன் மேயர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.