3வது ஆண்டாக யோகா தினத்தில் கலக்கும் பிரதமர் மோடி

3வது ஆண்டாக யோகா தினத்தில் கலக்கும் பிரதமர் மோடி

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியினால் சர்வதேச யோகா தினம் என்ற அங்கீகாரம் ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ஆம் தேதி கிடைத்தது. 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று 3வது ஆண்டாக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட முதல் யோகா தினத்தில் டெல்லியில் பிரம்மாண்டமான யோகா பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வகுப்பில் பொதுமக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

அந்த மாபெரும் யோகா வகுப்பில் 21 யோகாசனங்களை பங்கேற்பாளர்கள் செய்தார்கள். 35,985 பேர் இதில் கலந்துகொண்டது உலகின் மிகப்பெரிய யோகா வகுப்பாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. 84 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற யோகா வகுப்பு என்ற வகையில் அதிக நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரே சமயத்தில் கலந்துகொண்ட யோகா வகுப்பு என்ற கின்னஸ் சாதனையும் அன்று நிகழ்த்தப்பட்டது.

அதன் பின்னர் கடந்த ஆண்டும் சிறப்பாக யோகா தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இன்று மூன்றாவது ஆண்டாக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்று வரும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார்.

Leave a Reply