இந்திய அணியை வென்ற பாகிஸ்தான் அணிக்கு ரூ.1 கோடி. பிரதமர் நவாஸ் அறிவிப்பு

இந்திய அணியை வென்ற பாகிஸ்தான் அணிக்கு ரூ.1 கோடி. பிரதமர் நவாஸ் அறிவிப்பு

சாம்பியன்ஷிப் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையுடன் சென்ற பாகிஸ்தான் அணிக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது

தாயகம் திரும்பிய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு, அந்நாட்டு மக்கள் தாரை தப்பட்டையுடன் கோலாகல வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் மேலும் ஒரு மகிழ்ச்சியாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பை வென்ற வீரர்களுக்கு ரூ. 1 கோடி பரிசுத்தொகையாக அறிவித்துள்ளார்.

ஒரே ஒரு வெற்றியை பெற்றுவிட்டு வருடம் முழுவதும் அந்த வெற்றியை கொண்டாடி கொண்டிருக்காமல் அடுத்தடுத்த வெற்றிக்கு திட்டமிட வேண்டும் என்று பாகிஸ்தான் சீனியர் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply