பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் ஆதரவு

பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் ஆதரவு

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். பீகார் மாநில கவர்னராக இருந்த இவருக்கு பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் இரண்டாக பிரிந்து இருக்கும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இரண்டுமே பாஜக வேட்பாளருக்கு போட்டி போட்டு ஆதரவு கொடுத்துள்ளது. இருப்பினும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஒருசிலர் மட்டும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

பாஜகவுக்கு அதிமுகவின் இரு அணிகளும் ஆதரவு கொடுத்துவிட்ட நிலையில் தினகரன் ஆதரவாளர்களின் ஒரிசில எம்.எல்.ஏக்களால் பாஜகவுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றே கருதப்படுகிறது. ஒருவேளை அவர்கள் ஆதரவு இல்லை என்றாலும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவது உறுதி என்றே தெரிகிறது.

இந்த நிலையில் தினகரன் ஆதரவாளரான கருணாஸ், தினகரனை சந்தித்தபின் கூறியபோது, ‘தினகரன் கூறும் வேட்பாளருக்கே தனது ஆதரவு என்று தெரிவித்துள்ளார். அதேபோல் அதிமுகவின் இன்னொரு கூட்டணி கட்சியின் தமீம் அன்சாரி கூறியபோது, பாஜக வேட்பாளரை எந்த சூழ்நிலையிலும் ஆதரிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply