31 செயற்கைகோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது PSLV C 38 ராக்கெட்

31 செயற்கைகோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது PSLV C 38 ராக்கெட்

இந்திய விண்வெளித்துறை உலக நாடுகள் வியக்கும் வகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வரும் நிலையில் இன்று காலை சரியாக  9:29 மணிக்கு, பி.எஸ்.எல்.வி., – சி 38′ ராக்கெட், 31 செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்படுகிறது. ‘கார்ட்டோசாட் – 2’ செயற்கைகோளை, பி.எஸ்.எல்.வி., – சி 38 ராக்கெட் மூலம் இன்று காலை, ஶ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது இஸ்ரோ. இந்த செயற்கைகோள் புவியின் செயல்பாட்டை கண்காணிக்க இருக்கிறது.

மேலும், இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து 29 செயற்கைகோள்களும், இந்தியாவைச் சேர்ந்த ஒரு நானோ செயற்கைகோள் என மொத்தம் 31 செயற்கைகோள்களுடன் இன்று காலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி38 ராக்கெட். இதற்கான கவுன்ட்டவுன் நேற்று காலை 5.29 மணிக்கு தொடங்கியது. இந்த திட்டத்தின் மதிப்பு 160 கோடி ரூபாய்.

Leave a Reply