மோடி, ஓபிஎஸ், ஈபிஎஸ் முன்னிலையில் மனுதாக்கல் செய்தார் ராம்நாத் கோவிந்த்

மோடி, ஓபிஎஸ், ஈபிஎஸ் முன்னிலையில் மனுதாக்கல் செய்தார் ராம்நாத் கோவிந்த்

பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட ராம்நாத் கோவிந்த் சற்று முன்னர் மனுதாக்கல் செய்தார்,. வேட்புமனுவை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர்களும் பங்கேற்றனர்.

இந்த நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு அணிகளும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தற்போது தினகரன் அணியினர்களும் ஆதரவு கொடுத்துள்ளனர்.எனவே ராம்நாத் கோவிந்த் வெற்றி உறுதியாகியுள்ளது.

ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் குடியரசு தலைவர்கள் தேர்தலில் பதிவான வாக்குகள் 20ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்

Leave a Reply