பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

இந்திய மக்கள் அனைவரின் அடையாளமாக கருதப்படும் ஆதார் அட்டையை கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஆதார் எண்ணை வருமானவரி வரி அட்டையான பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்த நீதிமன்ற உத்தரவும் சமீபத்தில் வெளியானது

இந்நிலையில் இன்று மத்திய அரசு உத்தரவு ஒன்றை இதுகுறித்து பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஜூலை 1 ம் தேதி முதல் புதிதாக பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்வோர் ஆதார் எண்ணை அவசியம் இணைக்க வேண்டும். இதற்காக வருமான வரி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply