ஹரியானாவில் டிரம்ப் பெயரில் ஒரு கிராமம். அரசு எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

ஹரியானாவில் டிரம்ப் பெயரில் ஒரு கிராமம். அரசு எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் பெயர் வைக்கப்பட்டு ஒருசில மணி நேரங்களில் அந்த பெயர் நீக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயர் தினமும் நாளிதழ்களில் பரபரப்புடன் அடிபடுவதால் ஹரியானா மாநிலம் மேவத் மாவட்டத்தில் உள்ள மரோரா என்ற கிராமத்திற்கு டிரம்ப் பெயரை மாற்றி வைக்க அப்பகுதியில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்று முடிவு செய்தது.

ஆனால் கிராமத்திற்கு பெயர் மாற்றம் செய்வது குறித்து தொண்டு நிறுவனத்தினர் யாரிடமும் அனுமதி பெறவில்லை. எனவே ஒரு கிராமத்தின் பெயரை அரசு அனுமதியின்றி மாற்றும் செயல் முறைகேடானது என்று மேவத் துணை ஆணையர் மணிராம் ஷர்மா குற்றம்சாட்டியதை அடுத்து தொண்டு நிறுவனத்தினர் பெயர் மாற்றம் செய்யும் நடவடிக்கையை கைவிட்டு, விளம்பர பலகைகளை அகற்றினர்.

Leave a Reply