காளான் சுக்கா செய்வது எப்படி?
என்னென்ன தேவை
வெங்காயம் – 2
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு பல் – 5
கறிவேப்பிலை – 1
காளான் – 200 கிராம்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சீரக தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – முக்கால் டீஸ்பூன்
மிளகு தூள் – ஒன்றரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடித்த இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதனுடன் சேர்த்து வதக்கி பின் கறிவேப்பிலை, நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும். பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். தண்ணீர் ஊற்றாமல் அப்படியே அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வைக்கவும். சிறிது நேரம் கழித்து இறக்கியதும் கொத்தமல்லி இலை தூவி கிளறி எடுக்கவும். கெட்டியான பதத்தில் இருக்கும் காளான் சுக்கா சப்பாத்தி மற்றும் மிளகு ரசம், பருப்பு ரசம் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும்.