காக்னிசென்ட் நிறுவனத்தில் ஊதியம், பதவி உயர்வு நிறுத்தி வைப்பு

காக்னிசென்ட் நிறுவனத்தில் ஊதியம், பதவி உயர்வு நிறுத்தி வைப்பு

பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை மூன்று மாதங்களுக்கு காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (சிடிஎஸ்) நிறுவனம் நிறுத்தி வைத்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பதவி உயர்வு குறித்த தகவல்கள் பணியாளர்களுக்கு அறிவிக்கப்படும். ஆனால் `இந்த ஆண்டு பதவி உயர்வு இருக்காது. பணியாளர்கள் இதற்கு தயாராக இருக்க வேண்டும்’ என பணியாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் மனித வளபிரிவு அதிகாரி ஜிம் லெனாக்ஸ் அக்டோபர் 1-ம் தேதி முதல் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இருக்கும் என குறிப்பிட்டிருக்கிறார். இந்த மின்னஞ்சலில் மேலும் கூறியிருப்பதாவது:

துணைத் தலைவர் வரையிலான பதவி உயர்வுகள் விரைவில் அறிவிக்கப்படும். இவை அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். மூத்த துணைத் தலைவர் மற்றும் அதற்கும் மேல் இருப்பவர்களின் பதவி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

மேலாளர் வரையிலான பதவியில் இருப்பவர்களுக்கு சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் ஊதிய உயர்வாக அறிவிக்கப்படும். மூத்த மேலாளர்களுக்கு மாதாந்திர சம்பள உயர்வு வழங்கப்படுவதற்கு பதிலாக மொத்தமாக ஒரு தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் மொத்தம் 2.62 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இதில் இந்தியாவில் 1.50 லட்சம் நபர்கள் உள்ள னர்.

Leave a Reply