இன்று முதல் ஜிஎஸ்டி வரி அமல்: எந்தெந்த பொருட்களுக்கு லாபம்
இந்தியா முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒருசில பொருட்களுக்கு வரி குறைந்தும், பெரும்பாலான பொருட்களுக்கு வரி அதிகரித்தும் உள்ளது. 5%, 18%, 28% என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ள இந்த ஜிஎஸ்டி வரியால் எந்தெந்த பொருட்களுக்கு லாபம் என்பதை பார்ப்போம்
பால், உப்பு, காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை, மாவு,இறைச்சி, மீன், தேங்காய், லஸ்ஸி, தயிர், வெல்லம், இளநீர், பிரசாதம், தேங்காய் நார், விலங்குகள் விற்பனை, செய்தித்தாள், காது கேட்கும் கருவி, கச்சா பட்டு, பருத்தி,கல்வி, மருத்துவம், உயிர்காக்கும் ரத்தம், பதப்படுத்தப்படாத தேயிலை, பார்வையற்றோருக்கான பிரெய்லி புத்தகங்கள், குழந்தைகளுக்கான ஓவியப்புத்தகம் போன்ற பொருட்களுக்கு வரிவிலக்கு கிடைத்துள்ளதாக் இந்த பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
அதேபோல் சர்க்கரை, சமையல் எண்ணெய், பால் பவுடர், குழந்தைகளுக்கான பால் பொருட்கள், பேக்கிங் செய்யப்பட்ட பனீர், முந்திரி பருப்பு, தேயிலை, வறுக்கப்பட்ட காபிக் கொட்டைகள், ரெய்சின், ரேஷன் மண்எண்ணெய், கியாஸ், செருப்பு(ரூ.500வரை), ஆடைகள் (ரூ.1000 வரை), அகர்பத்தி, தென்னைநார் விரிப்பு ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கு 5% மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலை உயர வாய்ப்பு இல்லை.
மேலும் மொபைல் போன், ஊறுகாய்,பாதாம் பருப்பு, பழரசம், வெண்ணெய், நெய், பேக்கிங் செய்யப்பட்ட இளநீர், குடை போன்ற பொருட்களுக்க்கு 12% வரி விதிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலையும் உயர வாய்ப்பு இல்லை
ஆனால் கேமிரா, ஸ்பீக்கர்,, எடை எந்திரம், சி.சி.டி.வி, ஆப்டிகர் பைபர், டிஷ்யூ பேப்பர், நோட்டுகள், உருக்கு பொருட்கள், உணவுகள் பேக்கிங் செய்யும் அலுமினியம் பாயில்பேப்பர்மூங்கில் பர்னிச்சர்ஸ், நீச்சல் குளத்தில் குளிப்பது, மசாலா பேஸ்ட், காகித கவர்கள், ரூ.500க்கும் மேலான காலணிகள் ஆகிய பொருட்களுக்கு 18% வரி என்பதால் இவற்றின் விலை உயரும்
அதேபோல் சாக்கலேட், பான் மசாலா, குளிர்பானங்கள், பீடி, சூயிங்கம்,ஆட்டோமொபைல்ஸ், மோட்டார் சைக்கிள், வாட்டர் ஹீட்டர், வாஷிங்மெஷின், ஏ.டி.எம். சேவை, வாக்கூம் கிளீனர், சேஷிங் செய்யும் எந்திரம்(டிரிம்மர்ஸ்),மொலாசஸ் ,பெயிண்ட், டியோடரன்ட்ஸ், சேவிங் கிரீம், தலைக்கு அடிக்கும் டை, சன்ஸ்கீரீன், வால்பேப்பர், செராமிக் டைல்ஸ், ஹேர் கிளிப், தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் விமானம் ஆகியவைகளுக்கு 28% என்பதால் மிக அதிகளவில் இந்த பொருட்களின் விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.