சாதாரண பேருந்தை கேரவேனாக மாற்றி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தம்பதி
இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு தம்பதி நன்றாக இயங்கும் பேருந்துகளை விலைக்கு வாங்கி அவற்றில் சில மாறுதல்களை செய்து கேரவேனாக மாற்றி விற்கும் தொழிலை செய்து வருகின்றனர்.
வெறும் 1200 முதல் 1500 பவுண்டுகளுக்கு வாங்கிய பேருந்துகளில் சில மாற்றங்கள் செய்து 9000 முதல் 10000 பவுண்டுகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
டாம் கிராந்தம் மற்றும் கேலே பார்ன்ஸ் ஆகிய இந்த தம்பதிகள் கடந்த 2001 முதல் இந்த தொழிலை செய்து வருவதாகவும், தற்போது இவர்களுடைய கேரவேன் இபே மூலம் ஆன்லைனிலும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இவர்கள் தயாரிக்கும் கேரவேனில் ஒரு குடும்பம் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் இருப்பதால் மொபைல் வீடாக பயன்படுத்தி கொள்ளலாம். கடந்த 15 ஆண்டுகளில் இந்த தம்பதியினர் கோடிக்கணக்கில் இந்த தொழில் மூலம் சம்பாதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.