பொறுமை எல்லை கடந்துவிட்டது: வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்கா உள்பட உலக நாடுகளை எச்சரிக்கும் வகையில் வடகொரியா அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. ஐநா மூலம் பொருளாதார தடை விதிக்கப்பட்டும் வடகொரியா அசரவில்லை.
இந்த நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பல முக்கிய பிரச்னைகள் குறித்து பேசியுள்ளார்.
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் உடனான சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசியுள்ள டொனால்ட் டிரம்ப், “மனித உயிர்களுக்கு மதிப்பு அளிக்காத வடகொரியாவின் நடவடிக்கைகளை அமெரிக்க இதுவரை பொறுத்துக்கொண்டது. அப்போது அந்த பொறுமை எல்லையை கடந்துவிட்டது.” என்று பேசியுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த கருத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா விரைவில் வடகொரியாவின் போக்கிற்கு பலத்த பதிலடி கொடுக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.