விமானத்திலும் ஸ்டாண்டிங்: விரைவில் நடைமுறைக்கு வருகிறது.
பேருந்து மற்றும் ரயில்களில் தான் ஸ்டாண்டிங்கில் பயணம் செய்யும் பயணிகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் முதல்முறையாக விமானத்திலும் ஸ்டாண்டிங் முறை நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த ஸ்டாண்டிங் பயணத்திற்கு கட்டணச்சலுகை வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொலம்பியா நாட்டில் உள்ள விவா கொலம்பியா என்ற விமான நிறுவனம் நின்று செல்லும் நின்று கொண்டு பயணம் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு காரணம், சலுகை விலையில் டிக்கெட் விற்பனை ஆகும். அந்த பயணம் பார்ப்பதற்கு லோக்கல் பேருந்துகள் மற்றும் டெல்லி மெட்ரோ போன்று காட்சியளிக்கிறது. இந்த வசதி நம் நாட்டிற்கு தேவைப்படும் நிலையில், கொலம்பியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாதாரண மக்களும் பயன்பெறச் செய்வதே இதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளது. விமானத்தின் இருக்கைகள் அனைத்தும் புக்கிங் ஆனவுடன், ஸ்டாண்டிங் டிக்கெட்கள் என்ற பெயரில் நின்று செல்வதற்கான டிக்கெட்களை விற்கிறது. முதல் கட்டமாக ஒருமணி நேர பயணத்திற்கு, இந்த சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.