ஜூலை 17 முதல் குருப்-4 கலாந்தாய்வு. டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

ஜூலை 17 முதல் குருப்-4 கலாந்தாய்வு. டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கான இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5451 குரூப்-4 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது.இந்த தேர்வில் தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 12 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.குரூப் 4 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதேபோல் தட்டச்சர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4-6 வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Leave a Reply