ஜிஎஸ்டி எதிரொலி: 22 மாநிலங்களின் செக்போஸ்ட் நீக்கம்.
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே வரி என்ற ஜிஎஸ்டி கடந்த 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில் ஒருசில துறையினர் ஜிஎஸ்டியால் தங்களுக்கு நஷ்டம் என்று போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜிஎஸ்டியால் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு சரக்கு போக்குவரத்து செய்வது தற்போது மிக எளிதாகியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் செக்போஸ்ட்டிலும் நின்று சரக்கு வாகனங்கள் போவதால் அதிக நேர விரயம் ஏற்பட்டது. இந்த நிலையில் நாட்டில் உள்ள 29 மாநிலங்களில் 22 மாநிலங்களின் செக்போஸ்ட் தற்போது நீக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாநிலங்களிலும் செக்போஸ்ட்டை நீக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
எனவே மூன்றே நாட்களில் சரக்கு போக்குவரத்தின் நிலைமை மாறிவிட்டது. தமிழகத்தில் டெல்லி செல்ல வேண்டுமானால் முன்பு பல மாநிலங்களின் செக்போஸ்ட்டில் நிற்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது வெகு எளிதாக எந்த வித பிரச்சனையும் இன்றி செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.