3வது நாளாக தொடரும் திரையரங்கு வேலைநிறுத்தம்: ரூ.35 கோடி இழப்பு

3வது நாளாக தொடரும் திரையரங்கு வேலைநிறுத்தம்: ரூ.35 கோடி இழப்பு

ஜிஎஸ்டி மற்றும் 30% கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது நாளாக தமிழகம் முழுவதும் சுமார் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால், கடந்த 2 நாட்களில் மட்டும் 35 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்கு உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

30 சதவிகித கேளிக்கை வரி செலுத்திவரும் நிலையில், மேலும் 28 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டதற்கு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜிஎஸ்டி வரியை கூட கட்டிவிடலாம் தமிழக அரசின் 30% வரியை நீக்க வேண்டும் என்றும் திரையரங்கு கட்டணத்தை ரூ.200 வசூல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதே திரையரங்கு அதிபர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த போராட்டத்தின் காரணமாக, ஏற்கனவே வெளியான படங்களைத் திரையிடுவதிலும், வெளியாகவுள்ள படங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படம் தயாரித்து வெளியீட்டுக்குக்‌ காத்திருக்கும் தயாரிப்பாளர்களும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக ரூ.35 கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாக, திரைத்துறையினர் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு திரையரங்கிலும் ஆபரேட்டர்கள், நுழைவுச்சீட்டு கொடுப்போர், துப்பரவுத் தொழிலாளர்கள், உணவுப் பொருள் விற்பனையாளர், வாகன நிறுத்துமிட ஊழியர்கள் என, தமிழகம் முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply