தென்னிந்தியாவுக்கு பெருமை சேர்த்த அகஸ்தியர் மலை: யுனெஸ்கோ சான்றிதழ்
தமிழகத்தில் 1672 சதுர கி.மீ., பகுதியும், கேரளாவில் 1828 சதுர கி.மீ., பகுதியும் என மொத்தம் 3500.36 சதுர கி.மீ. பகுதியை கொண்ட அகஸ்தியர் மலை புராணங்களில் இடம்பெற்ற பெருமை பெற்றது.
தற்போது இந்த அகஸ்தியர் மலை பகுதி உயிர்கோள் காப்பக பகுதியாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இதற்கான சான்றிதழை தற்போது வனத்துறை அமைச்சரிடம் யுனெஸ்கோ அமைப்பு வழங்கியது
கடந்த 2016-ம் ஆண்டு பெருவில் நடந்த நிகழ்ச்சியில்ல் அகஸ்தியர் மலை பகுதி உயிர்கோள் காப்பக பகுதியாக அறிவித்தது.
அகஸ்தியர் மலை தவிர இந்தியாவில் உள்ள நீலகிரி, மன்னார் வலைகுடா, சுந்தரவன காடுகள், நிகோபார் உள்ளிட்டவை யுனெஸ்கோவின் உயிர்க்கோள இருப்பிடங்களின் பட்டியலில் ஏற்கெனவே இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.