சபரிமலை உண்டியலில் பாகிஸ்தான் பணம் எப்படி வந்தது?

சபரிமலை உண்டியலில் பாகிஸ்தான் பணம் எப்படி வந்தது?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் உள்ள உண்டியலில் பாகிஸ்தான் நாட்டுப்பணம் நாணயக் குறிப்பு மாநில பொலிஸின் கவனத்தை ஈர்த்தது.

சபரிமலை ஐயப்பன்ற கோவில் உண்டியல் காணிக்கை எண்ணுவதற்கா திறக்கப்பட்ட போது அதில் பாகிஸ்தான் பணம் சிக்கியுள்ளது. உண்டியல் திறக்ப்பட்டதும் அதில் உள்ள நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும் கன்வேயர் பெல்ட் மூலம் எண்ணும் இடத்திற்கு அனுப்பப்படுவது வழக்கம். பாகிஸ்தான் நாட்டின் 20 ரூபாய் நோட்டு ஒன்று மடிந்த நிலையில் நாணயங்களுக்கு மத்தியில் தென்பட்டிருக்கிறது.

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோவிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பாகிஸ்தான் பணம் சபரிமலை உண்டியலில் கண்டெடுக்கப்பட்டது இதுதான் முதல் முறை என்றும் பிற நாட்டு பணமும் அவ்வப்போது கிடைப்பதுண்டு என்றும் கூறியுள்ளனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர் மேற்கொண்டு விசாரிப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply