விராத் கோஹ்லி அபார சதம்: தொடரை வென்றது இந்தியா
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் இடையே கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 205 ரன்கள் எடுத்தது. ஹோப் 46 ரன்களும், எஸ்டி ஹோப் 51 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஷமி 4 விக்கெட்டுக்களையும், யாதவ் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்த நிலையில் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கினை நோக்கி விளையாடிய இந்திய அணி 36.5 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரயும் வென்றது. விராத் கோஹ்லி அபாரமாக விளையாடி 111 ரன்கள் எடுத்தார். விராத் கோஹ்லி ஆட்டநாயகனாகவும், ரஹானா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இரு அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது.