இன்றைய ராசிபலன்கள் 09/07/2017
மேஷம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
ராசி குணங்கள் ரிஷபம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
ராசி குணங்கள் மிதுனம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
ராசி குணங்கள் கடகம்
தொட்டது துலங்கும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒருவரை சந்திப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பயணங்களால் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
ராசி குணங்கள் சிம்மம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ராசி குணங்கள் கன்னி
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
ராசி குணங்கள் துலாம்
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
ராசி குணங்கள் விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
ராசி குணங்கள் தனுசு
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
ராசி குணங்கள் மகரம்
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
ராசி குணங்கள் கும்பம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பணபலம் உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பழைய கடன் பிரச்னைகள் தீரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
ராசி குணங்கள் மீனம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்