தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழ்நாடு கலவர பூமியாக மாற வாய்ப்புள்ளதாகவும் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது சொந்த தொகுதியான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்து அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அதுவே தமிழ்நாடு கலவர பூமியாக மாற வாய்ப்பை உண்டாக்கிவிடும் என்றும் கூறினார்.
மேலும் இந்திய மீனவர்கள் எல்லையை கடந்தால் அபராதம் கட்ட வேண்டும் என்று கூறும் இலங்கை அரசு, இலங்கை மீனவர்கள் எல்லையை கடந்தால் அபராதம் கட்டத்தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.