உண்மையை சொன்னால் வில்லன் என்கிறார்கள்! விஷால்

உண்மையை சொன்னால் வில்லன் என்கிறார்கள்! விஷால்

தமிழ் சினிமா காப்பாற்றப்பட வேண்டுமானால் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க வழிசெய்ய வேண்டும். அதற்கு டிக்கெட், பார்க்கிங், தின்பண்டங்களை நியாயமான ரேட்டில் திரையரங்கு உரிமையாளர்கள் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் சகுந்தலாவின் காதலன்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதுகுறித்து நடிகர் விஷால் பேசினார். அவர் கூறியதாவது:

மாநில அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்..சினிமாவை காப்பாற்றுங்கள் ஜி.எஸ்.டி வரிக்கு மேல் இன்னொரு வரியை போட்டு..கஷ்டபடுத்த வேண்டாம். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தியேட்டருக்கு வரும்போது, பார்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம், தின்பண்டங்கள் கட்டணம் என அதிக தொகை செலவிட வேண்டி உள்ளது. இவ்வளவு வருமானம் வந்தாலும் தயாரிபாளர்களுக்கு வருமானம் வருவதில்லை. அதை சரி செய்ய வேண்டும்..தியேட்டர்களுக்கு ரசிகர்களை வர வைக்க வழிவகை செய்ய வேண்டும் இதையெல்லாம் சொன்னால் என்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை தமிழ் சினிமா காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறினார்

Leave a Reply