பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால் காஷ்மீருக்குள் சீன ராணுவ நுழையும்! சீன பத்திரிகை
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல வருடங்களாக காஷ்மீர் பிரச்சனை இருந்து வரும் நிலையில், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால் சீன ராணுவம் காஷ்மீருக்குள் நுழையும் என்று சீன பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவுக்கும் பூடானுக்கும் இடையே சர்ச்சையாகி இருக்கும் டோக்லாம் பகுதியில் இந்தியா தனது ராணுவத்தை நிறுத்துவது சரி என்றால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் காஷ்மீர் பகுதிக்குள் சீனாவும் தன்னுடைய ராணுவத்தை நிறுத்துவது சரியான நடவடிக்கை தான் என்று சீனா எச்சரித்துள்ளது.
இந்தத் தகவலை சீன மேற்கு பல்கலைக்கழகத்தின் இந்திய கல்வி மைய இயக்குனர் லாங் ஜிங்க்சுன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரை பீஜிங்கில் இருந்து வெளியாகும் குளோபல் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ளது.
சீனாவின் பெரும்பாலான வர்த்தம் இந்தியாவை நம்பி இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களாக சீன பொருட்களுக்கு இந்திய தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாலே ஆத்திரமடைந்த சீனா இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.