கதிராமங்கலம் பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்த வைகோ

கதிராமங்கலம் பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்த வைகோ

கடந்த சில நாட்களாகவே கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சியின் எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக பரபரப்பில் உள்ளது. இந்த நிலையில் தற்போது அரசியல் கட்சி தலைவர்களும் இந்த பிரச்சனையில் தலையிட்டுள்ளனர். கதிராமங்கலத்தில் நேற்று நடைப்பெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் அவர் தீடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. அதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாக, தொடர்ந்து மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.இதற்கிடையில் கடந்த மாதம் 30ஆம் தேதி, எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டு, வயலுக்குள் பாய்ந்ததால் மக்கள் அதிர்ந்தனர். இதையடுத்து ஊர்மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.

கசிவு ஏற்பட்ட இடத்திற்கு செல்ல அதிகாரிகளையும், போலீசாரையும் தடுத்தனர். இதற்குள் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. பின்னர் மக்கள் மீது தடியடி நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து அனைத்துக்கட்சிகள் சார்பில் திங்களன்று கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தீடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட வைகோ தண்ணீர் அருந்ததி விட்டு உரையாற்ற தொடங்கினார். இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply