வெள்ளை மாளிகையின் நிர்வாக தலைவராக இந்தியர்! அதிபர் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் நிர்வாக தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியோமி ராவ் என்பவரை டிரம்ப் அரசு நியமனம் செய்துள்ளது.
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் ஆன்டனின் ஸ்காலியா சட்டக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர் 44வயது நியோமி ராவ். மேலும் கன்சர்வேடிவ் சுப்ரீக் கோர்ட் நீதிபதி கிளாரன்ஸ் தாமஸிடம் கிளர்க்கான பணியாற்றியவர். இந்நிலையில் நியோமி ராவை, அமெரிக்க வெள்ளை மாளிகையின் தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் துறை தலைவராக அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
இதன்மூலம் வெள்ளை மாளிகையின் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை நியோமிராவ் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஜார்ஜ் புஷ் ஆட்சியின் போது, அரசில் இணை ஆலோசகராக இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.