கருணாநிதியை சந்தித்த காந்தி பேரன்
துணை குடியரசு தலைவர் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு கோரினார்.
துணை குடியரசுத் தலைவராக உள்ள ஹமீத் அன்சாரியின் பதவிகாலம் ஆகஸ்ட் 10ம் தேதி முடிவடைகின்றது. இதனையடுத்து புதிய துணை குடியரசு தலைவரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 17 ஏதிர்கட்சிகளின் சார்ப்பில் கோபாலகிருஷ்ண காந்தி துணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை வந்த அவர் கோபாலபுரம் இல்லத்திற்கு நேற்று இரவு சென்றார்.
அங்கு தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.இதன் பின்னர் தி.மு.க தலைவர் கருணாநிதியிடமும், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து ஆதரவு கோரினார்.