அந்த 1.5 ஓட்டுக்களை எனக்கு போட்டிருக்கலாமே? அன்புமணி
ஓவியாவிற்கு போட்ட 1.5 கோடி வாக்குகளை, எனக்கு போட்டிருந்தால் தமிழ்நாட்டை காப்பாத்திருப்பேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், 15 பிரபலங்கள் 100 நாட்கள் வசித்து வந்தனர். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் காயத்ரி ரகுராம் சமீபத்தில் பேசிய வார்த்தைகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து காயத்ரி, கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் கமல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இதற்கிடையில் ஓவியா, பரணியை காப்பாற்ற 1.5 கோடி பேர் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஓவியாவிற்கு 1.5 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். அதே வாக்குகளை எனக்கு அளித்திருந்தால், நான் தமிழ்நாட்டை காப்பாற்றி இருப்பேன் என்று கூறியுள்ளார்.