புதுவையில் ஆயுர்வேத கிளினிக் பெயரில் நடந்த விபச்சார விடுதி: 

புதுவையில் ஆயுர்வேத கிளினிக் பெயரில் நடந்த விபச்சார விடுதி: 

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களி விபச்சாரமும் அமோகமாக நடந்து வருவது சகஜமான ஒன்றாகவே மாறிவிட்ட நிலையில் இந்த விபச்சார வியாபாரம் புதுவையில் கொடிகட்டி பறப்பதாக திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது.

புதுவை பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஆயுர்வேத கிளினிக்கில் சந்தேகப்படும்படியான நபர்கள் உள்ளே போவதும் வெளியே வருவதாக இருந்ததால் இதுகுறித்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிறப்பு அதிரடிக் காவல்துறையினர் திடீரென அந்த ஆயுர்வேத கிளினிக் உள் நுழைந்து அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது கையும் களவுமாக பிடிக்கப்பட்டது. இதன்பின்னர் இந்த கிளினிக்கை நடத்தி வந்த திண்டிவனத்தைச் சேர்ந்த கார்த்திக், புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி தமிழ்ச் செல்வி, சாமிப்பிள்ளைத் தோட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தது காவல்துறை. மேலும் அவர்களிடம் இருந்து 12 செல்போன்கள், 24,680 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

Leave a Reply