ரஜினியை திமுக எம்.எல்.ஏ திடீரென சந்தித்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ஆண்டுக்குள் அரசியலில் குதிப்பது உறுதி என்றும் அவரது பிறந்த நாள் அன்று கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை அவர் அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுக எம்,எல்.ஏவும் ஸ்டாலினின் வலது கையுமாக இருப்பவருமான அன்பில் மகேஷ் ரஜினியை சந்தித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
தற்போதைய ஆளும் அதிமுகவின் ஆட்சி அதிகபட்சம் இந்த நான்கு வருடங்களில் முடிந்துவிடும் என்றும் மீண்டும் திமுக ஆட்சி அமைவதும் ஸ்டாலின் முதல்வர் ஆவதும் உறுதி என்ற நிலை தமிழகத்தில் இருக்கும்போது, திடீரென ரஜினி குட்டையை குழப்பி வருவதாக திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் ரஜினியின் நிலை குறித்து தெரிந்து கொள்ளவும், ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தால் அந்த நிலையை மாற்றி கொள்வதற்கான தூதுவராகவே அன்பில் மகேஷ் ரஜினியை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்படினும் இந்த சந்திப்பில் உள்நோக்கம் இருக்கின்றதா? என்பது இன்னும் சிலநாட்களில் தெரிந்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.