தொழில் தொடங்க ஏற்ற மாநிலம்: தமிழகத்திற்கு கடைசி இடம்

தொழில் தொடங்க ஏற்ற மாநிலம்: தமிழகத்திற்கு கடைசி இடம்

தமிழகம் கடந்த சில வருடங்களாக தொழில் துவங்க ஏற்ற மாநிலமாக இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்வாங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொழில் தொடங்க வசதியான மாநிலங்கள் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இதில் ஆந்திர, தெலங்கானா, குஜராத் மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பெற்று கம்பீரமாக உள்ள நிலையில் இந்தப் பட்டியலில் தமிழ்நாடு, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களை பெற்று பரிதாபமாக உள்ளது. இதுகுறித்த பட்டியலை நிதி ஆயோக் முதன்மைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் இன்று வெளியிட்டார்

இதற்கு முக்கிய காரணமாக தமிழகத்தில் தொழில் தொடங்க உரிமம் பெறும் நடைமுறைகள், சூழ்நிலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெறுவதில் கடினமான நடைமுறை இருப்பதாக கூறப்படுகிறது.

மின்வசதி, கல்வி வளர்ச்சி ஆகியவற்றில் தமிழகம் முன்னணியில் இருந்தாலும் தொழில் தொடங்குவதற்கும், முதலீட்டை ஈர்ப்பதற்கும் ஏற்ற மாநிலமாக இல்லை என்பதே இந்த ஆய்வறிக்கை கூறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply