பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பா? மத்திய அரசின் பதில்

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பா? மத்திய அரசின் பதில்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் அந்த நோட்டுக்களை மாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை வெற்றி பெறாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதிலளித்துள்ளது.

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு மக்கள் தங்களிடம் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கால அவகாசம் வழங்கியது.

இருப்பினும் பொதுமக்கள் பலர் தங்களிடம் உள்ள ரூபாய் தாள்களை மாற்ற முடியவில்லை என்ற கருத்து பரவலாக இருந்து வந்தது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் சரியான காரணம் இருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதனை அடுத்து மத்திய அரசின் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே பழைய உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டதெனவும், அவற்றை மாற்றிக் கொள்ள போதிய கால அவகாசமும் வழங்கப்பட்டதெனவும் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் வாய்ப்பு அளித்தால், கருப்புப்பணத்தை ஒழிக்கும் நோக்கம் வெற்றி பெறாமல் போய்விடும் என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

Leave a Reply