அண்டார்டிகாவில் முதல் திருமணம். பிரிட்டன் காதல் ஜோடியின் புதிய முயற்சி
அண்டார்டிகா மனிதர்கள் வாழவே முடியாத பகுதியாக இருக்கும் நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த காதல் ஜோடி அங்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த திருமணம் நடந்தால் அண்டார்டிகாவில் நடைபெறும் முதல் திருமணம் என்ற பெருமையை இந்த திருமணம் பெறும்
பூமியின் தென் துருவமான அண்டார்டிகா முற்றிலும் பனிப்பாறைகளால் ஆனது. இங்கு மைனஸ் 9 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதால் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இங்கு இல்லை. இருப்பினும், பல்வேறு நாடுகளின் ஆராய்ச்சி மையங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றனர். அதில் ஆராய்ச்சியாளர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆராய்ச்சியாளர்களில் உள்ள ஒரு காதல் ஜோடி, தங்கள் திருமணத்தை வித்தியாசமாக அண்டார்டிகாவில் வைத்து கொள்ளலாம் என்று யோசித்ததன் விளைவாக இந்த வார இறுதியில் இவர்களுக்கு அண்டார்டிகாவில் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த சிறப்பு மிக்க திருமணத்தை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் நடத்தி வைக்க இருக்கிறார்.
திருமண வைபோகத்தில் ஷாம்பையினுடன் கூடிய காலை உணவும், இசையுடன் கூடிய சிறியதொரு நிகழ்ச்சியும் நடைபெறும். ஆனால், சிறு குறையாக மணமக்களின் பெற்றோர்களோ, உறவினர்களோ திருமணத்தில் கலந்து கொள்ள முடியாது என்பது தான் வருத்தம் தரக்கூடிய விஷயம் என்கிறார் ஆராய்ச்சி நிலையத் தலைவர் பால் சாம்வெஸ்.