சிரிப்பு யோகா – நம் ஆரோக்கியத்துக்கான இனிப்பு மருந்து

சிரிப்பு யோகா – நம் ஆரோக்கியத்துக்கான இனிப்பு மருந்து

மருந்துகளின் விக்கிபீடியா

மருத்துவர்கள் எழுதித்தரும் மாத்திரைகளின் பெயர்கள் கூட முன்பு நமக்குப் புரியாது. இப்போது, மக்களிடம் விழிப்பு உணர்வு அதிகரித்திருக்கிறது. என்ன மாத்திரை சாப்பிடுகிறோம், அதன் காம்பினேஷன் என்ன என்பது வரை கவனித்துப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு உதவும் ஆப் தான் Medical Drugs Guide Dictionary. மருந்தின் பெயரைச் சொன்னால், அதன் பலன்கள் எவை, என்னென்ன பிராண்டுகள் இந்த காம்பினேஷனில் வருகின்றன என அவற்றின் முழுமையான தகவல்களைக் கொண்ட மருந்துகளின் விக்கிபீடியாவாகவே இருக்கிறது. அழகான வடிவமைப்பும் எளிமையான விளக்கங்களும் பிடித்துப்போய், ஒரே ஆண்டில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் ஆப்-ஆக வளர்ந்திருக்கிறது.

சில மருந்துகளின் பெயர்கள் விடுபட்டிருப்பதும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யும் பட்டன் வசதி இல்லாததையும் சிலர் குறைகளாகத் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்தடுத்த அப்டேட்டில் இவை களையப்படும் என எதிர்பார்க்கலாம்.

பிளே ஸ்டோர் லிங்க்


https://play.google.com/store/apps/details?id=com.appguru.apps.drug.dictionary

24 மணி நேர டாக்டர்

நம் மொபைல் நெட்வொர்க்கில் ஏதேனும் சிக்கல் இருந்தால், கஸ்டமர் கேருக்கு கால் செய்தால் போதும். தீர்வுகளை போன் மூலமே வழங்குவார்கள். அதே லாஜிக்கை நம் உடல் ஆரோக்கியத்துக்கு அப்ளை செய்திருக்கிறது டாக்ஸ்ஆப் (DocsApp).

24 மணி நேரமும் டாக் ஆப்-ல் சிறந்த மருத்துவர்கள் ஆன்லைனில் இருக்கிறார்கள். நமது பிரச்னைகளைச் சொன்னால், ஆன்லைன் மூலமே மருத்துவம் பார்க்கிறார்கள். தேவைப்பட்டால் டெஸ்ட் எடுக்கச் சொல்கிறார்கள். டெஸ்ட் முடிவுகளின் படங்களை அப்லோடு செய்தால் அதைப் பார்த்துத் தீர்வுகள் தருகிறார்கள். மருத்துவரைப் பார்க்க அப்பாயின்ட்மென்ட் தேவையில்லை. காத்திருக்கவும் வேண்டியதில்லை. குறைந்த பணத்தில் நிறைவான சேவை என்பதால் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இதன் மூலம் பயன்பெற்றுவருகிறார்கள். மருந்துகளை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யும் வசதியும் உண்டு.

பிளே ஸ்டோர் லிங்க்


https://play.google.com/store/apps/details?id=com.docsapp.patients

Leave a Reply