தமிழ் தலைவாஸ் அணியின் அம்பாசிடர் ஆனார் கமல்ஹாசன்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் போலவே புரோ கபடி லீக் போட்டிகள் வரும் 28ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் அணிகளில் ஒன்று சச்சின் தெண்டுல்கரின் ‘தமிழ் தலைவாஸ்’ அணி. இந்த அணிக்கு கமல்ஹாசன் பிராண்ட் அம்பாசிடராக தேர்வு பெற்றுள்ளார்.
இதுகுறித்து கமல் கூறியதாவது: கபடி விளையாட்டுடன் இணைவதில் பெருமிதம் கொள்கிறேன். நமது முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் தலைவாஸ் அணியின் பிராண்ட் அம்பாஸிடராக் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன். என் அருமை தலைவாஸ், உங்கள் மனதில் பெருமை பொங்க, கோட்டை தாண்டி புகழை சூடிடிங்கள்
ஜூலை 28 முதல் அக்டோபர் 28 வரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி விளையாடும் போட்டிகளில் கமல்ஹாசன் நேரடியாக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.