முதல்வர் ரஜினி, துணை முதல்வர் கமல், அஜித்-விஜய் ஆதரவு: எஸ்.வி.சேகரின் திட்டம்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே தனித்தனியாகவோ, இணைந்தோ அரசியல் அறிவிப்பை எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் ரஜினி, கமல் மட்டுமின்றி அஜித், விஜய்யும் இணைந்து ஒரே கட்சியில் செயல்பட்டு, சினிமாக்கார்களாலும் நல்ல ஆட்சியை தர முடியும் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என்று நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியின்போது தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
‘ரஜினிகாந்த் தனியாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும். அதில் கமல் இணைய வேண்டும். ரஜினி முதல்வராகவும், கமல் துணை முதல்வராகவும் இருக்க வேண்டும். இந்த கட்சியில் அஜித், விஜய் இணைந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்
மேலும் சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று ஒருசிலர் கூறி வரும் நிலையில் சினிமா நடிகர்களாலும் சிறப்பான ஆட்சியை தர முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். யார் அரசியலுக்கு வரவேண்டும், யார் வரக்கூடாது என்று முடிவு செய்வது மக்கள் தானே தவிர அதை அரசியல் கட்சி தலைவர்களும் மாவட்ட செயலாளர்களும் தீர்மானிக்க முடியாது’ என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். எஸ்.வி.சேகரின் விருப்பம் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்