கடலுக்குள் புது உலகம்: மாயமான MH370 விமானத்தை தேடும்போது கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

கடலுக்குள் புது உலகம்: மாயமான MH370 விமானத்தை தேடும்போது கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

கடந்த 2014ஆம் ஆண்டு மலேசியாவை சேர்ந்த MH370 என்ற விமான திடீரென மாயமாகி அதில் பயணம் செய்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது இன்றுவரை தெரியாத மர்மமாக உள்ளது. இந்த விமானத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக விஞ்ஞானிகள் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விமானத்தை கடலுக்குள் தேடியபோது அங்கு புதிய உலகம் ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதில் எரிமலைகள், பள்ளத் தாக்குகள் மற்றும் உயரமான முகடுகள் இருப்பது போன்ற வரைபடத்தை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் ஆய்வுத் தலைவர் ஸ்டூவர்ட் மின்ஷின் கூறுகையில், ‘கடலுக்கு அடியில் மறைந்து கிடக்கும் பகுதிகளைப் பற்றிய தகவல்கள் வருங்காலத்தில் கடல் ஆராய்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்’ என்றார்.

Leave a Reply