வெள்ளை மாளிகை அதிகாரி திடீர் ராஜினாமா! காரணம் என்ன?

வெள்ளை மாளிகை அதிகாரி திடீர் ராஜினாமா! காரணம் என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் ஒருசில அதிரடி நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சீன் ஸ்பைசர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜினாமா செய்தது மட்டுமின்றி டிரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு அவர் கண்டனமும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அண்மையில் தகவல்தொடர்பு துறை இயக்குனராக ஆன்டணி ஸ்க்ராம்மூஸி என்பவரை நியமித்ததற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார் ஸ்பைசர். டிரம்ப் எடுத்த இந்த முடிவின் எதிரொலியாகவே ஸ்பைசர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

சீன் ஸ்பைசர் கடந்த 2000 முதல் 2002 வரை தகவல் தொடர்புத்துறை இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply