சத்தான கறிவேப்பிலை – கொத்தமல்லி ஜூஸ்

சத்தான கறிவேப்பிலை – கொத்தமல்லி ஜூஸ்

கறிவேப்பிலை, கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி,
புதினா – கால் கைப்பிடி,
இஞ்சி – சிறிதளவு,
எலுமிச்சை – 1/2 பழம்,
உப்பு அல்லது தேன் – தேவையான அளவு.

செய்முறை:

எலுமிச்சையைச் சாறு எடுத்து, தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி ஆகியவற்றோடு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, மிக்சியில் நன்றாக அரைத்து, வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.

இதனுடன், எலுமிச்சைச் சாறு மற்றும் தேவைப்பட்டால் உப்பு அல்லது தேன் சேர்த்துப் பருகலாம்.

கறிவேப்பிலை – கொத்தமல்லி ஜூஸ் ரெடி.

Leave a Reply