ரயில் பயணிக்கு கொடுத்த சாப்பாட்டில் பல்லி! டுவிட்டர் மூலம் ரயில்வே அமைச்சருக்கு புகார்
ரயில் பயணிகளுக்கு ரயில்வே துறையினர்களால் வழங்கப்படும் சாப்பாட்டின் தரம் குறித்து பல்வேறு புகார்கள் தினந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ரயில் பயணி ஒருவருக்கு கொடுத்த சாம்பார் சாதத்தில் பல்லி இருந்ததாக வெளிவந்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
புதுடெல்லியில் இருந்து ஹவுரா செல்லும் பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு நேற்று வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் பல்லி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பயணி ரயில்வே ஊழியர்களிடம் புகார் செய்துள்ளார்.
ஆனால் இந்த புகார் குறித்து ரயில்வே ஊழியர்கள் பொறுப்புடன் பதில் கூறாததால் உடனடியாக அவர் பல்லியுடன் இருந்த சாப்பாட்டை புகைப்படம் எடுத்து ரயில்வே அமைச்சருக்கு புகாராக அவரது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் இந்த புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை
Lizard found in food served on-board Poorva Express, railways order probe